‘அரசன்’ படத்தில் இரு வேடங்களில் சிம்பு

1 mins read
354be289-4c3f-467f-a634-8b7767514d92
சிம்பு. - படம்: ஊடகம்

வரும் 24ஆம் தேதி முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், இளமையான சிம்பு, 45 வயது தோற்றம் என சிம்பு இரு தோற்றங்களில் நடிக்க உள்ளார்.

இப்படத்துக்கான விளம்பரக் காணொளிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாம். முதல் பாகத்தை இயக்கிய வெங்கட் பிரபுவும் தனுஷும் அவ்வப்போது சந்தித்துப் பேசும்போதே படத்தின் திரைக்கதையை எழுதிவிட்டாராம் வெங்கட்.

‘அரசன்’ படத்துக்குப் பிறகு ‘மாநாடு-2’ படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்