சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி கண்ணும் கருத்துமாக நடித்துவருகிறார். இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சம்பாதித்திருக்கிறது. படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அண்மையில் முடிந்தது.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் விறுவிறுப்புடன் நடித்துவருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் படங்களைத் தந்தவருக்கு பத்து தல, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் சறுக்கலை கொடுத்தன. இருந்தாலும் அவரது நடிப்புக்கு மாபெரும் வரவேற்புக் கிடைத்து வருகிறது. சிம்புவின் அதிரடி மாற்றம் திரைத்துறையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் சிம்பு, இயக்கம், இசையமைப்பு, பாடல்கள் என பல துறைகளில் முத்திரை பதித்து வருகிறார். இப்போது செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளாராம்.
அமெரிக்காவில் இருந்தபடியே சில இயக்குநர்களுடன் காணொளி மூலம் தொடர்புகொண்டு பேசி கதையைக் கேட்டு வருகிறாராம் சிம்பு.
ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்து ‘ஏஐ’ தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.
தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அதன் படப்பிடிப்பின் இடையே, கிடைத்த ஓய்வுநேர வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்கா சென்றுள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், ‘அரசன்’ சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக சிம்புவை வெகுவாகப் பாராட்டியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

