ஏஐ தொழில்நுட்பம் படிக்கிறார்: கமல் வழியில் சிம்பு

ஏஐ தொழில்நுட்பம் படிக்கிறார்: கமல் வழியில் சிம்பு

1 mins read
746f4bca-799d-48b8-bb73-b5e1de770bbd
சிம்பு. - படம்: இந்தியா டுடே

கிட்டத்தட்ட கமல்ஹாசனைப் போலவே மாறி வருகிறார் சிம்பு.

குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவது, ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக உடலை வருத்திக்கொள்வது, சினிமா சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வது என்று கமல் வழியில் நடைபோடுகிறார்.

அந்த வகையில், தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பம் குறித்து தீவிரமாகப் படித்து வருகிறாராம்.

இதற்காக சிம்பு அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அங்கு ஏஐ தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் வெளியான தகவல் குறித்து அவரது தரப்பு ஏதும் கூறவில்லை.

அமெரிக்காவில் இருந்தபடியே சில இயக்குநர்களுடன் காணொளி மூலம் தொடர்புகொண்டு பேசி கதையைக் கேட்டு வருகிறாராம் சிம்பு.

ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்து ‘ஏஐ’ தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.

தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அதன் படப்பிடிப்பின் இடையே, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்கா பறந்துவிட்டதாகத் தகவல்.

இப்படத்துக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக சிம்புவைப் பாராட்டியுள்ளார் வெற்றிமாறன்.

குறிப்புச் சொற்கள்