சிம்புவுடன் ஜாக்கிசான் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
அவர்கள் இணையும் படத்தை ஜூட் அந்தனி ஜோசப் இயக்க உள்ளாராம். இவர் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘2018’ என்ற திரைப்படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் மலையாள மூத்த முன்னணி நடிகர் மம்மூட்டியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி மட்டும் உறுதியானால் சிம்புவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஜப்பானில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

