தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சிம்பு

3 mins read
b638e80a-985a-41e0-a4e7-623da268a639
‘தக் லைஃப்’ படத்தில் கமல், சிம்பு. - படம்: ஊடகம்
multi-img1 of 2

எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறது.

சிம்பு தற்பொழுது கமல் ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலுடன் அவர் இணைந்து நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஜூன் ஐந்தாம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் சூழலில், சிம்புவின் அடுத்த படத்தையும் இயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்துவரும் சிம்பு இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளைச் சந்தித்தார். இரண்டாவது காதல் தோல்விக்குப் பிறகு ஆன்மிக வழியில் சென்ற அவர், சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அந்தவகையில் அவர் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் மிகவும் பருமனாகக் காணப்பட்டார்.

இடையில் இரண்டு காதல் தோல்விகள் அரங்கேறின. நயனுடனான காதல் தோல்விக்குப் பிறகு அவர் நடித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால், ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு அவரது சிந்தனைகள் எல்லாம் ஆன்மிகத்தின் பக்கம் சென்றது.

மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்சினைகள், உடல் எடை அதிகரித்தல் என சிம்புவால் ஒருமித்த கவனத்தோடு சினிமாவை அணுக முடியவில்லை. இதன் காரணமாக இடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தார்.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையைக் குறைத்து மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

அதில் அவர் நடித்த ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மீண்டும் பழைய சிம்புவாக மாறி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

எனவே, அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இப்போதைய தமிழ் சினிமாவின் நடப்பைத் தெரிந்துகொண்டு சரியாக இளம் இயக்குநர்களுடன் அவர் கைகோத்திருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எனவே பழைய சிம்புவை இனி பார்க்கலாம் என்கிற நம்பிக்கை திரைத்துறையில் பிறந்திருக்கிறது.

இதற்கிடையே, ஒருபக்கம் இளம் இயக்குநர்களுடன் கைகோத்த அவர், மறுபக்கம் முன்னணி இயக்குநர் மணிரத்னத்துடனும் இணைந்திருக்கிறார்.

அதன்படி கமல் ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடலில் கமலும் சிம்புவும் சேர்ந்து ஆடிய நடனம் பலரின் கைத்தட்டல்களை வாங்கியுள்ளது.

எனவே, முழுப் படத்தில் அவர்கள் எப்படி நடித்திருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கான ஆவலும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மீண்டும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே இரண்டு பேரும் ‘செக்க சிவந்த வானம்’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். சிம்புவுக்கும் மணிக்கும் இடையே புரிதல் ஆழமாகியிருப்பதால்தான் மீண்டும் அவர்கள் இணைகிறார்கள் என்றே கருதப்படுகிறது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்