புதுப்படத்திற்காக 10 நாளில் 10 கிலோ எடை குறைத்த சிம்பு

புதுப்படத்திற்காக 10 நாளில் 10 கிலோ எடை குறைத்த சிம்பு

படம்: ஊடகம்

14 Jul 2025 - 5:16 pm

1 mins read

நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதுப்படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.

படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால், இளமையான வேடத்தில் நடிப்பதற்காக அவர் கடந்த 10 நாள்களில் 10 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய படத்தில் சிம்பு ஒரு வேடத்தில் 40 வயது தோற்றத்துடனும் மற்றொரு வேடத்தில் 20 வயது இளையராகவும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இதற்கு முன்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் 18 வயது இளைஞராக நடிப்பதற்காக சிம்பு தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருந்தார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் புதுப் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ படத்தைத் துவங்க இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்