14 கிலோ எடை குறைத்த சிம்பு

1 mins read
d1b2d91e-6bf9-4634-970c-5683e1724af1
 ‘அரசன்’ படத்தில் சிம்புவின் தோற்றம். - படம்: ஊடகம்

சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த ஆண்டுத் தீபாவளி, திருவிழாவாகக் களைகட்டியது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ‘அரசன்’ படத்துக்காக மீண்டும் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு.

இப்படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்ட காணொளித் தொகுப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதற்கான படப்பிடிப்பை சென்னையில் ஏறக்குறைய நான்கு நாள்கள் நடத்தியுள்ளார் வெற்றிமாறன்.

இப்படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் விளம்பரக் காணொளிக்கான படப்பிடிப்புத் தொடங்கும் வரை சிம்புவும் வெற்றிமாறனும் சந்தித்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், 14 கிலோ எடை குறைத்து படப்பிடிப்புத் தளத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் வந்து நின்ற சிம்புவைக் கண்டு வெற்றிமாறனும் படத்தயாரிப்பாளர் தாணுவும் அசந்துபோய்விட்டனர். இருவரும் சிம்புவைக் கட்டியணைத்துப் பாராட்டியுள்ளனர்.

இதனிடையே, சிம்பு நடிக்கவுள்ள நேரடித் தெலுங்குப் படத்துக்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரே சமயத்தில் சிம்பு குறித்து நேர்மறைத் தகவல்கள் வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகக் கடலில் நீந்த வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்