சென்னை: நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 49வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) வெளியானதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்காலிகமாக இப்படத்திற்கு ‘எஸ்டிஆர் 49’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரீஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என அடுத்தடுத்து முன்று வெற்றிப் படங்களை வழங்கியுள்ள சிம்பு அடுத்து மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.
இதற்கிடையே, சொந்தமாக ‘அட்மேன் சினி ஆர்ட்ஸ்’ (Atman Cine Arts) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சிம்பு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தனது 50வது படத்தைத் தயாரிக்கும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மூன்றாம் தேதியன்று சிம்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.