சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’.
கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தெர்ட் ஐ புரொடக்ஷன்ஸ், எஸ்.பி.புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏற்கெனவே இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்புக்குப் பிந்திய பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இது ஹரிஷ் கல்யாணின் திரைப் பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ‛பீர் சாங்’ எனும் பாடல் இணையத்தில் பிரபலமடைந்தது. இப்போது ‘டீசல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தில்லுபாரு ஆஜா’ என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இப்பாடல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.