கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி வாழ்க்கைப் படத்தில் சிம்பு, திரிஷா இணைய வாய்ப்பு

1 mins read
7bca503e-13c2-4501-aad8-055a2888f516
விராத் கோஹ்லி-அனுஷ்கா, சிம்பு-திரிஷா. - படங்கள்: ஊடகம்

அண்மைக் காலமாக விராத் கோஹ்லியின் தீவிர ரசிகராகி விட்டார் சிம்பு.

விராத்தின் இள வயது சிகை அலங்காரத்துடன்தான் சிம்பு வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், விராத் கோஹ்லியின் வாழ்க்கைப் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவை ஒருதரப்பு அணுகியிருப்பதாகத் தகவல்.

சிம்புவும் கிட்டத்தட்ட அந்த வாய்ப்பை ஏற்கத் தயாராகிவிட்டாராம். ஒருவேளை விராத் கோஹ்லியாக சிம்பு நடிக்கும் பட்சத்தில், அவரது மனைவி அனுஷ்காவாக, நடிகை திரிஷா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இப்போதே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற, ‘நீ சிங்கம்தான்’ பாடல் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ளார் விராத் கோஹ்லி.

அதற்கு, ‘நீங்களும் சிங்கம்தான்’ எனக் கூறியுள்ளார் சிம்பு.

குறிப்புச் சொற்கள்