தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துபாய்க்கு சென்று கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த சிம்பு

1 mins read
21491d9d-55f0-4034-893b-bd9ca80f900f
சிம்பு. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ் நடிகர்களில் சிலருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு.

அண்மையில், துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியை துபாய்க்குச் சென்று நேரில் கண்டு களித்தாராம் சிம்பு.

இதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் ஜீவாவும் சென்றிருந்தனர்.

அண்மையில், நடிகர் சிம்பு துபாயில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக இணையத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டன. ஆனால், எந்தப் படத்தின் படப்பிடிப்பு என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

சிம்புவின் 49வது படத்தை `பார்கிங்’ பட இயக்குநர் ராம்குமாரும் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும் 51வது படத்தை `டிராகன்’ அஸ்வத் மாரிமுத்துவும் இயக்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்