காய்ச்சலிலும் அயராது உழைக்கும் சிம்பு

காய்ச்சலிலும் அயராது உழைக்கும் சிம்பு

1 mins read
2f98539f-ecf1-4559-b282-f9677234c4ab
நடிகர் சிலம்பரசன். - படம்: ஊடகம்

படப்பிடிப்புத் தளத்திற்கு கூட சரியான நேரத்தில் போகாதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிம்பு. அப்படிப்பட்ட அவர் ‘தக் லைஃப்’ படத்திற்காக கடுமையான காய்ச்சல் இருந்தபோதும் நடித்துக் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, அபிராமி, த்ரிஷா, அஷோக் செல்வன், நாசர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பகுதி சென்னையிலும் மற்றொரு பகுதி செர்பியாவிலும் நடைபெறுவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரங்கராய சக்திவேல் நாயக்கராக நடிக்கும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த ஜோடியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்