சிறுமியின் கனவை நனவாக்கிய சிம்ரன்

சிறுமியின் கனவை நனவாக்கிய சிம்ரன்

1 mins read
3a50474d-0117-4e8a-aecb-3561b6d91443
நிஷாவுடன் சிம்ரன். - படம்: விகடன்
Google News Preferred Icon

பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்த நிஷா என்ற 10 வயது மாற்றுத் திறனாளிச் சிறுமி நடனத்தின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

தமக்குள்ள உடல் குறைபாட்டை எப்போதுமே ஒரு தடையாக நினைக்காமல் மிகுந்த தன்னம்பிக்கையோடு நிஷா தொடர்ந்து நடனமாடி வந்தார்.

தான் நடனமாடும் காணொளிகளைத் தமது சொந்தச் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் தொடர்ந்து பதிவிட்டும் வந்தார்.

நிஷாவின் நடனக் காணொளிகளைத் தன்னார்வலர் ஆஷிக் என்பவர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

இதன்மூலம், சிறுமி நிஷாவின் நடனத் திறமையைப் பலரும் அறியுமாறு தன்னார்வலர் ஆஷிக் செய்துவந்தார்.

அத்துடன், நடிகை சிம்ரனிடம் சிறுமி நிஷாவைப் பற்றிய முழுத் தகவல்களையும் தன்னார்வலர் ஆஷிக் நேரில் சென்று தெரிவித்தார்.

சிறுமியான நிஷாவுக்கு நடனத்தின்மீது இருக்கும் பேரார்வம் பற்றியும், அவரின் ஆசைகள் பற்றியும் சிம்ரனிடம் ஆஷிக் விரிவாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து, சிறுமி நிஷாவை சிம்ரன் நேரில் அழைத்துச் சந்தித்து அவரின் கனவை நனவாக்கி இருக்கிறார்.

அந்தச் சந்திப்பின்போது நிஷா, சிம்ரனின் பாடல்களுக்கு அவருடனேயே சேர்ந்து நடனமாடினார்.

அதுமட்டுமன்றி, நிஷாவுக்கு சைக்கிள் தேவை என்பதைத் தன்னார்வலர் ஆஷிக்மூலம் அறிந்துகொண்ட சிம்ரன், ஒரு புதிய சைக்கிளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

அத்தோடு, நிஷாவிடம் பேசிய நடிகை சிம்ரன், படிப்பில் மட்டுமே முதன்மையாகக் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கனவுகளைத் தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் எனவும் ஊக்கமளித்திருக்கிறார்.

நிஷாவை சிம்ரன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி, தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்