மீண்டும் நாயகியாக நடிக்கும் சிம்ரன்

1 mins read
c8ddddf6-2ee5-499e-bc90-72cee5c13694
சிம்ரன். - படம்: ஊடகம்

நடிகை சிம்ரன் திரையுலகில் கால்பதித்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

இந்நிலையில் ‘தி லாஸ்ட் ஒன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இது தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகும் படம். திகிலும் கற்பனையும் நிறைந்த படமாக உருவாகிறது.

28 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட தம்மால் நாயகியாக நடிக்க முடியும் என்று படத்தயாரிப்பாளர், இயக்குநர், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் சிம்ரன்.

அண்மையில் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ராக்கெட்ரி’, ‘குல்மோகர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இரு படங்களும் சில விருதுகளையும் வென்றன.

இதேபோல் தமிழில் ‘அந்தகன்’ படத்தில் பிரசாந்துடன் சிம்ரன் இணைந்து நடித்ததற்கும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

“இனி தொடர்ந்து இதேபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். கதை கேட்கும்போதே எனது எதிர்பார்ப்பு குறித்து இயக்குநர்களிடம் தெளிவாகப் பேசிவிடுவதால் யாருக்கும் எந்த வகையிலும் குழப்பம் ஏற்படுவதில்லை,” என்கிறார் சிம்ரன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்