முன்னணி கதாநாயகிகளைவிட இருமடங்கு உற்சாகத்துடன் காணப்படுகிறார் சிம்ரன்.
காரணம், அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பெரும் வெற்றியை அடுத்து, அவருக்குப் புதுப் பட வாய்ப்புகள் குவிகின்றனவாம்.
இந்நிலையில், அவர் ஏற்கெனவே தனி கதாநாயகியாக நடித்துள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ என்ற படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் சிம்ரனின் கணவராம். இது கற்பனைக் கலந்த திகில் படமாக உருவாகிறது.
இதுவும் வெற்றி பெறும் பட்சத்தில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைப் போன்று சிம்ரனும் தனி நாயகியாக நடிக்கத் தயாராகிவிடுவாராம்.
சிம்ரனின் கணவர் தீபக், ‘ஓடு ராஜா ஓடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
எனினும், சிம்ரனின் மகன்கள் தமிழில் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

