நடிகை ஜான்வி கபூருக்கு அவருடைய நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் ரூ.5 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்திருக்கிறார்.
உடனே யார் அவர், ஜான்வியின் காதலரா எனக் கேள்விகளை அடுக்க வேண்டாம்.
பிரபல இந்திப் பாடகி அனன்யா பிர்லாதான் இவ்வளவு விலை உயர்ந்த பரிசை அளித்தவர். இவர் பிரபல தொழில் அதிபர்களான குமார் மங்கலம், நீர்ஜா பிர்லாவின் மகள். இவரும் ஜான்வி கபூரும் நீண்டநாள் தோழிகளாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பீன்ஸ் தயாரித்த ‘லிவின் தி லைப்ஃ’ பாடல் மூலம் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் அனன்யா.
நட்பைக் கொண்டாடும் வகையில் பல கோடி ரூபாய் செலவில், லம்போர்கினி வகை காரை தனது தோழிக்குப் பரிசளித்து மகிழ்ந்துள்ளார்.
அவ்வளவு ஆழமான நட்பா என ஒட்டுமொத்த இந்தித் திரையுலகமே இந்தப் பரிசைக் கண்டு வியந்து போயிருக்கிறது.
‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’, ‘பரம் சுந்தரி’, ‘பெத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.