தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக தனி இசை நிகழ்ச்சியில் சின்ன குயில்

1 mins read
6f426a25-98ef-427f-9a69-db690cc054ae
பாடகி சித்ரா. - படம்: ஊடகம்

முதன்முறையாக தனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் பின்னணிப் பாடகி சித்ரா.

இவர் இதுவரை 25,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார். ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள், 43 மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பல்வேறு உலக நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ள சித்ரா, முதன்முறையாக சென்னையில் நடைபெறும் தனி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

‘கே.எஸ்.சித்ரா லைவ் இன் கான்சர்ட்’ என்ற பெயரில், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்