ஆஸ்கர் வரலாற்றை மாற்றியமைத்த ‘சின்னர்ஸ்’

ஆஸ்கர் வரலாற்றை மாற்றியமைத்த ‘சின்னர்ஸ்’

படம்: வார்னர் புரோஸ்

23 Jan 2026 - 11:39 am

1 mins read

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி வெளியானது.

அதில், கடந்த ஏப்ரல் மாதம், வெளியான ஹாலிவுட் படமான ‘சின்னர்ஸ்’ (Sinners) 16 பிரிவுகலின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை ரயான் கூக்லர் (Ryan Coogler) இயக்கினார்.

ஆஸ்கர் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு திரைப்படம் 16 பிரிவுகளில் இடம்பெறுவது இதுவே முதல்முறை. 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா சார்பில் நீரஜ் கெய்வான் இயக்கத்தில் உருவான ‘ஹோம்பவுண்ட்’ படம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு அப்படம் தேர்வாகவில்லை.

இந்நிலையில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் உள்ளிட்ட 16 பிரிவுகளுக்கு ‘சின்னர்ஸ்’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1930ஆம் ஆண்டுகளில் நடந்த நிறவெறி தொடர்பான கதையை மையமாகக் கொண்டு அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு, ஜேம்ஸ் கேமரூனின் ‘டைட்டானிக்’, ‘ஆல் அபௌட் இவ்’, ‘லாலா லேண்ட்’ ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்