தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இணையும் ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி

1 mins read
cc840ac8-83d2-41f9-8577-bd5461c7da8b
மூவர் அணி கூட்டணி. - படம்: ஊடகம்

‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் இப்புதிய படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எம்.ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் பெரும் வெற்றி பெற்றது. யுவன் இசையில் பாடல்கள் இன்று வரை பிரபலமாக ஒலித்து வருகின்றன.

தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது.

இது குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் - ஜீவா - யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தற்போது ஜீவா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே, இப்படமும் முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்