மூன்றாவது வெற்றிக்குக் காத்திருக்கும் சிவா

மூன்றாவது வெற்றிக்குக் காத்திருக்கும் சிவா

1 mins read
fd76187b-0577-42ad-8c84-fff5072178e1
‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்` படத்தில் `திருவிழாவுக்கு திண்டுக்கல் ரீட்டாவின் நடன நிகழ்ச்சி இல்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேற வழியில்லை` என சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார்.

இதனால்தான் திருச்சி விமான நிலையத்தில் சிவா மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இத்தனைக்கும் அதே விமானத்தில்தான் கமல்ஹாசனும் திருச்சியில் வந்திறங்கினார்.

சிறிது தாமதித்தே சிவா வெளியே வந்தார். அப்போது தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின், சிவாவை அழைத்துப் பேசினார் கமல். அதனால் சிவா ஆறுதல் அடைய, இதைத்தொடர்ந்தே கமல் தயாரிப்பில் ‘அமரன்` படத்தில் நடித்து வருகிறார் சிவா. படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

ஏற்கெனவே ‘மாவீரன்’, ‘அயலான்’ படங்களில் தொடர் வெற்றிபெற்ற சிவா, ‘அமரன்’ படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறாராம்.

குறிப்புச் சொற்கள்