தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையுலகில் சிவாஜியின் பேரன் தர்ஷன் அறிமுகம்

1 mins read
ff534837-159d-4b1a-b459-d750e9ec6a51
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்.   - படம்: ஊடகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 4வது பேரனும் ராம்குமாரின் இளைய மகனுமான தர்ஷன் விரைவில் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் நடிக்கும் முதல் படத்தைச் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவாஜி கணேசனின் இரண்டு மகன்களான ராம்குமார், பிரபு ஆகிய இருவருமே நடிகர்கள். ராம்குமார் ஒரு சில படங்களிலும் பிரபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்த தகவல்.

இந்நிலையில், பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ‘கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் கடந்த 2003ஆம் ஆண்டு ‘மச்சி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு சில படங்களில் நடித்தார். மற்றொரு மகனான சிவாஜி தேவ், ‘சிங்கக்குட்டி’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்