‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன்.
சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் தர்ஷன். ராம்குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது தர்ஷன் ராம்குமாரும் திரைத்துறையில் காலடி வைத்திருக்கிறார்.
இந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தை அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்குகிறார்.
இப்படத்தில் தர்ஷனுடன் கங்கை அமரனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் நடிப்பின் பக்கம் வருகிறார் கங்கை அமரன்.
அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வந்த ரோஜா, கிட்டத்தட்ட 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.
தந்தை ராம்குமார், தயாரிப்பாளர்கள் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் ஆகியோருடன் தர்ஷன் கணேசன் ரஜினி வீட்டிற்குச் சென்று அவரின் வாழ்த்துகளைப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

