சென்னை அருகே உள்ள வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் ஒரு சிங்கத்தையும் ஒரு புலியையும் தத்தெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு அவற்றின் முழுப் பராமரிப்புச் செலவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சிவா தத்தெடுத்துள்ள சிங்கத்தின் பெயர் ஷ்ரேயா என்றும் புலியின் பெயர் யுகா என்றும் அப்பூங்கா நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து, சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.