மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும், கருப்பண்ணசுவாமிக்கு அரிவாள் நேர்த்திக்கடனும் அவர் செலுத்தினார்.
பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அண்மையில் வெளியான ‘அமரன்’ படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
மலை மீதுள்ள ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கருப்பண்ணசாமி ஆலயத்திற்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவாள் வழங்கினார். தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதமும் வழங்கப்பட்டது.