சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் `பராசக்தி’, விஜய்யின் `ஜன நாயகன்’ ஆகிய இரண்டு படங்களையுமே அடுத்த ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இரண்டுமே பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள். எனவே, நேரடியாகப் போட்டியிடுவதைவிட, வெளியீட்டுத் தேதியை கொஞ்சம் முன்பின்னாகத் தள்ளிவைத்துக் கொள்ளலாமா என இரு படங்களின் தயாரிப்புத் தரப்பிலும் யோசிக்கிறார்கள்.
இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்பதால் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
அநேகமாக விஜய்க்கு வழிவிட்டு சிவகார்த்திகேயன் ஒதுங்கிக்கொள்வார் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.