‘அமரன்’ படத்தின் பெரும் வெற்றியை அடுத்து, சிவகார்த்திகேயன் தனது ஊதியத்தை ஐம்பது கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க உள்ளார் சிவா. இந்தப் படத்துக்குத்தான் அவர் ரூ.50 கோடி ஊதியம் கேட்பதாகத் தகவல்.
இதையடுத்து, ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்துக்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியம் ரூ.60 கோடி என்றும் கூறப்படுகிறது.