தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பராசக்தி’ படக்குழுவுக்கு பிரியாணி பரிமாறிய சிவகார்த்திகேயன்

2 mins read
93979e31-bd2f-4b18-bcc0-770f289275c0
‘பராசக்தி’ படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறினார் சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளையொட்டி தான் நடித்து வரும் ‘பராசக்தி’ படக் குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த காணொளி தற்பொழுது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறியுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிக அதிகமாக வசூல் செய்த படமாக ‘அமரன்’ மாறியது.

பிப்ரவரி 17ஆம் தேதி தனது 40வது வயதை எட்டினார் சிவகார்த்திகேயன். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு தினமும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். ‘டான் பிக்சர்ஸ்’ சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் அவருடன் அதர்வா, ஜெயம் ரவி, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது கல்லூரியில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியது படக்குழு. மேலும் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா உட்பட நடிகர்கள் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் தன் கையால் பிரியாணி பரிமாறினார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் மற்றொரு படம் ‘மதராசி’. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதனால் ரசிகர்கள் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்