பிறந்தநாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் அடுத்த பட அறிமுகக் காணொளி

பிறந்தநாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் அடுத்த பட அறிமுகக் காணொளி

1 mins read
3353c6e9-82ae-4f16-a63e-9fa8b69e9122
சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயன். - படம்: இண்டியா கிளிட்ஸ் தமிழ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா நடிக்க இருந்த படம் மீண்டும் தள்ளிப்போகிறது.

ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தை இயக்கியுள்ளார் சிவகுமார் முருகேசன். சிவாதான் இதன் தயாரிப்பாளர்.

முழுப்படத்தையும் பார்த்த பின்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சிவா, அருமையாக இயக்கி இருக்கிறீர்கள் என்று சிவகுமார் முருகேசனை கட்டி அணைத்துப் பாராட்டினாராம்.

சூட்டோடு சூடாக தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளார். சிவா, சிவகுமார் முருகேசன் இணையும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த வாரமே படத்தின் அறிமுகக் காணொளியைப் படமாக்க உள்ளனர். பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி இந்த அறிமுகக் காணொளி வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்