தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் பழைய தலைப்பில் சிவகார்த்திகேயன் படம்

1 mins read
66ae3382-4e1d-4676-96fa-ac68e2012729
‘எஸ்கே23’ படத்தின் பெயர் ‘மதராசி’. - படம்: ஸீநியூஸ் / இணையம்

சென்னை: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜ்ஜு மேனன், ‘டான்சிங் ரோஸ்’ ‌ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதாக தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ‘எஸ்கே23’ படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படத்துக்கு ‘மதராசி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘காக்கி சட்டை’, ‘மாவீரன்’, ‘அமரன்’, ‘பராசக்தி’ எனப் பழைய படங்களின் தலைப்பைக் கொண்டுள்ள திரைப்படங்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் ‘மதராசி’ இடம்பெறுகிறது.

முன்பு ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் ‘மதராசி’ எனும் படம் வெளியானது.

குறிப்புச் சொற்கள்