இன்றைய தேதியில் புதுப் படங்களைவிட, மறுவெளியீடு காணும் பழைய படங்களுக்குத்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மறுவெளியீடு மூலம் தயாரிப்பாளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் நல்ல லாபம் பார்த்து வரும் நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு திரைகண்ட, விஜய் நடித்த ‘சிவகாசி’ படமும் மறுவெளியீடு காண்கிறது.
அடிதடி, சண்டைகள், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை கலந்து உருவான இப்படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்திருந்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்த இந்தப் படம் அப்போது பெரும் லாபம் ஈட்டியது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, மறுவெளியீடு காண உள்ளது ‘சிவகாசி’.
இத்தகவலை தயாரிப்பாளர் ரத்னம் அறிவித்துள்ளார். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது விஜய்யின் ‘கில்லி’ படம் வெளியாகி, மீண்டும் வசூலை வாரிக்குவித்தது.

