பழம்பெரும் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் இருவருக்கும் இப்பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
நடிகர் சிவகுமார் கடைசியாக 2001ஆம் ஆண்டு ‘பூவெல்லாம் உன்வாசம்’ படத்தில் நடித்திருந்தார்.
பின்னர், சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அவர், தற்போது எந்தப் படத்திலும் நடிப்பதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

