நடிகரை அறைந்தேன்: பூஜாவின் புகாரால் சலசலப்பு

1 mins read
f5aad8bd-d7f0-4743-a590-22dc2f7eb551
பூஜா ஹெக்டே. - படம்: ஃபெமினா

முன்னணி நாயகன் ஒருவர் தனது கேரவனில் அனுமதி இன்றி நுழைந்து எல்லைமீறி நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியதாக வெளியான தகவல் திரையுலக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த நடிகர் தன்னைத் தவறான நோக்கத்துடன் அணுகியபோது கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் யார் அந்த நடிகர் என்று பூஜா தாம் அளித்த ஒரு பேட்டியில் தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தாம் அந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்றும் பூஜா ஹெக்டே கூறியதாகத் தெரிகிறது.

எனினும் பூஜா குறிப்பிட்டது ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் என்று சில தெலுங்கு ஊடகங்கள் கூறுகின்றன.

இருவரும் ‘ராதே ஷ்யாம்’ தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். எனினும், அதன் பிறகு இணைந்து பணியாற்றவில்லை என்று ஒரு தரப்பினர் சுட்டிக்காட்ட, மற்றொரு தரப்போ எந்த நடிகர் என்று பூஜா தெரிவிக்காதபோது பிரபாஸ் மீது பழி சுமத்துவது அபாண்டமென குரல் எழுந்துள்ளது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்திப் படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

குறிப்புச் சொற்கள்