தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விநாயக சதுர்த்திக்கு வெளியாகும் சிறிய படங்கள்

1 mins read
e552ee13-630e-4ede-8456-6eec5094b813
சில சிறிய படங்கள் விநாயக சதுர்த்தி நாளான நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’, ஜி/வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘அடங்காதே’ ஆகிய படங்கள் ஆகஸ்ட் 27ஆம் தேதியும் அதர்வா நடித்துள்ள ‘தணல்’ படம் ஆகஸ்ட் 29ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தப் படங்கள் வெளியாவதை உறுதிப்படுத்தும் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த சில நாள்களாக எந்த விளம்பரங்களும் வரவில்லை என்பதால் நிச்சயம் இந்தப் படங்கள் வெளிவராது.

அதேசமயம், ஆகஸ்ட் 27ஆம் தேதி ‘கடுக்கா’ என்ற படம் மட்டும் வெளியாகிறது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அசுர மனிதன்’, ‘கிப்ட்’, ‘குற்றம் புதிது’, ‘நறுவீ’, ‘சொட்ட சொட்ட நனையுது’, ‘வீர வணக்கம்’, ‘பேய்கதை’ ஆகிய படங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் ‘பல்டி’ படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.

இவ்வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டு இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐ கடக்கிறது. இந்த ஆண்டு முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் 75 படங்களாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்