புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும் அழகும் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தன.
தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை சினேகா பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது கணவருடன் கிரிவலம் சென்றார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து அவர் வழிபாடு செய்தார்.
கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

