என் மகனுக்கு அறவே இனிப்பு பிடிக்காது: சிவகார்த்திகேயன்

என் மகனுக்கு அறவே இனிப்பு பிடிக்காது: சிவகார்த்திகேயன்

படம்: ஊடகம்

21 Nov 2024 - 10:49 pm

1 mins read

தனது மகனுக்கு இனிப்புகள் என்றால் அறவே பிடிக்காது என்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒருமுறை ஐஸ்கிரீம் ஊட்டியபோது, அவன் பெரிதாக அழத் தொடங்கிவிட்டதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிறந்தநாளில் கேக் வெட்டும்போதுகூட என் மகன் இனிப்பு சாப்பிடுவதில்லை. அதேசமயம் காரமான உணவு என்றால் விரும்பிச் சாப்பிடுவான். அதனால் அவனுக்குப் பிடித்தமான கார உணவுகளைத்தான் தருகிறோம்,” என்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனிடையே, இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படம், இதுவரை 300 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாம்.

சிவா, ஆர்த்தி தம்பதியர்க்கு ஆராதனா என்ற மகளும் குகன் தாஸ், பவன் தாஸ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்