பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ், ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் வேலை பார்த்து வருவதாக அவரது தாயார் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுசித்ரா, தங்கும் இடம், உணவுக்காக ஊதியம் பெறாமல் தனது மகன் வேலை பார்ப்பதாக கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
“சில சமயம் குதிரை, ஆடுகளையும் என் மகன் கவனித்துக்கொள்கிறார். அவர் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவரோ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் போதும் என்கிறார். என் கணவரும் மகனும் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்பியதில்லை,” என்றார் சுசித்ரா.
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரணவ், கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் லாலிடமே உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2022ஆம் ஆண்டு இவர் நடித்த ‘ஹிருதயம்’ வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது.

