46 வயதாகியும் நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரது அம்மா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் அம்மா அளித்துள்ள நேர்காணலில், ‘‘எனது மகன் பிரபாஸுக்கு ரவி என்ற நண்பர் இருக்கிறார். ரவியின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல் நன்றாக அமையவில்லை.
“போராட்டம் நிறைந்ததாக இருந்தது. கணவன், மனைவிக்கு இடையே ஒத்துவரவில்லை. சண்டை சச்சரவுகளும் வாக்குவாதமும் தொடர்ந்து வந்தது. அந்தத் திருமண வாழ்க்கை கடைசியில் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டது.
“எனவே, திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான், பாதியில் முறிந்துபோகும் என்ற எண்ணம் பிரபாஸ் மனதில் ஆழமாக வேறூன்றிவிட்டதால்தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை,’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரபாஸின் நண்பர் ரவி யார் என ரசிகர்கள் இணையத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.
‘சலார் 2’, ‘ராஜா சாப்’, ‘ஸ்பிரிட்’, ‘கண்ணப்பா’ ஆகிய ‘பான் இந்தியா’ படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் பிரபாஸ்.