தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிறந்தநாளில் பாடல் வெளியீடு; ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்

2 mins read
7bd29bbb-602b-4b11-8d65-a6ee4228be3f
‘இட்லி கடை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் தனுஷ்.

அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதையடுத்து, ‘தனுஷ்-54’ படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனுஷ் இந்தியில் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படமும் இந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜூலை 28ஆம் தேதி தனுஷுக்குப் பிறந்தநாள். இதையொட்டி, தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது எனத் திட்டமிட்டுள்ளாராம்.

“குறைந்தபட்சம், 500 ரசிகர்களையாவது சந்திக்க விரும்புகிறார் தனுஷ். மேலும், இனி வாரந்தோறும் ரசிகர்களைச் சந்திக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்,” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில், தனுஷ் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களின் வரிசை திரையுலகத்தினரையே வியக்க வைத்துள்ளது.

‘ராயன்’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’. இப்படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை தனுஷ், ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை தனுஷ்தான் எழுதியுள்ளார்.

பிறந்தநாளையொட்டி, தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ மறுவெளியீடு காண்கிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது இப்படம்.

குண்டர் கும்பல் கதையென்றால் அடிதடி, வெட்டுக்குத்து மட்டுமே இருக்கும் என்பதை மாற்றி, அக்கதாபாத்திரங்கள் மூலம் உளவியல் ஆழத்தையும் சமூக அமைப்பின் தாக்கத்தையும் அந்தப் படத்தில் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

மறுவெளியீட்டுக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பதைக் காண தனுஷும் ஆவலாக இருப்பதாகத் தகவல்.

தற்போது ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கெட்டுள்ளாராம்.

வழக்கமாக, சண்டைக் காட்சிகளில் நடிக்க சிறிதும் தயங்காத தனுஷ், இந்தப் படத்துக்காக ஓரிரு நாள்கள் ஒத்திகை மேற்கொண்டாராம்.

இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு எனப் பலரும் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்