மீண்டும் ‘அனகோண்டா’

1 mins read
c053b3e4-2e8c-4ce5-b869-f07e97780bcf
 சோனி தயாரிப்பு நிறுவனம் ‘அனகோண்டா’ படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளது.  - படம்: ஊடகம்

1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அனகோண்டா’. சரியான விமர்சனம் கிடைக்காவிட்டாலும் வணிக ரீதியில் அனைத்துலக அளவில் பெரிய வசூலைப் பெற்றது இப்படம்.

2004ல் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதன் பிறகு 2008, 2009, 2015 என மூன்று ‘அனகோண்டா’ திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகின. ஆனால் இதில் எந்தப் படமும் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது சோனி தயாரிப்பு நிறுவனம் ‘அனகோண்டா’ படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளது.

டாம் கோர்மிகன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் பால் ரூட் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு தேதி குறித்த காணொளியை சமூக ஊடகத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘அனகோண்டா’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்