நடிகை ரம்யா பாண்டியனின் வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் ஒலிக்கப்போகிறது. அவருக்கும் யோகா ஆசிரியர் லவல் தவானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் காதல்வயப்பட்டுள்ள நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருக்கிறது. வட இந்தியாவில் உள்ள ரிஷிகேஷ் கோவிலில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
’ஜோக்கர்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரம்யா. அதன் பின்னர் ‘டம்மி பட்டாசு’, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமூக ஊடகங்களில் இவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.