‘அய​லான்’ ரவிக்​கு​மார் படத்தில் நாயகனாகும் சூரி

‘அய​லான்’ ரவிக்​கு​மார் படத்தில் நாயகனாகும் சூரி

1 mins read
098b05ea-cf8e-460c-8fab-a628b56d24a2
நடிகர் சூரி. - படம்: இந்து தமிழ் திசை

‘இன்று நேற்று நாளை’, ‘அய​லான்’ படங்​களை இயக்​கியவர் ஆர்​.ரவிக்​கு​மார். அவர் தனது அடுத்த படத்தில் சூரியைக் கதாநாயகனாகத் தேர்வு செய்துள்ளார்.

நடிகர் சூரி, ‘கொட்​டுக்​காளி’, ‘விடு​தலை’, ‘மாமன்’ படங்​களுக்​குப் பிறகு ‘மண்​டாடி’ படத்​தில் நடித்து வரு​கிறார்.

சூரி-ரவிக்​கு​மார் கூட்டணியில் உருவாகும் படத்தை ‘மைத்ரி மூவி மேக்​கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்​கிறது. இது குறித்து சமூக ஊடகத்தில் புதிய ‘போஸ்டர்’ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் அஜித்​கு​மார் நடித்த ‘குட் பேட் அக்​லி’, பிரதீப் ரங்​க​நாதன் நடித்த ‘டியூட்’ படங்​களைத் தயாரித்துள்ளது.

நகைச்சுவை நடிகராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய சூரி தற்போது தொடர்ந்து கதாநாயகனாக நடித்து முன்னேறி வருகிறார். அவர் நாயகனாக நடிக்கும் படங்களும் நல்ல வசூலைக் கொடுத்தும் வருகின்றன.

குறிப்புச் சொற்கள்