அண்மையில் நடிகர் அஜித்தை நேரில் சென்று பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் நடிகர் சூரி.
‘மாமன்’ படத்தை அடுத்து ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் சூரியுடன் சுகாஸ், மகிமா நம்பியார், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில், தனது இணையப்பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார் சூரி.
அந்த பதிவில், “அவரைப் பார்த்த நொடியிலேயே உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும் மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டதாக இருந்தது,’’ என்று பதிவிட்டுள்ளார்.

