செப்டம்பர் மாதம் திரை காணும் சூரியின் ‘மண்டாடி’

செப்டம்பர் மாதம் திரை காணும் சூரியின் ‘மண்டாடி’

2 mins read
9804b1ba-a059-442b-837c-ee89071a9810
‘மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. - படம்: ஆர்.எஸ். இன்ஃபோ

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.

பின்னர் விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வேதாளம்’, ரஜினியின் ‘அண்ணாத்தே’, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அவர் அசத்தினார்.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களிலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்திலும் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தன. குறிப்பாக ‘கருடன்’ ‘மாமன்’ நல்ல வசூலை ஈட்டின.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அவர் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சூரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மண்டாடி’.

மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட அப்படம் பெரிய பொருள்செலவில் தயாராகியுள்ளது.

எல்ரட் குமாரின் ‘ஆர்.எஸ். இன்போ’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘மண்டாடி’ படத்தில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

ரூ.75 கோடி செலவில் உருவாகி வரும் இந்தப் படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டமான படமாக அமையும் என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாககக் கடலோரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சவாலான தயாரிப்புக் காட்சிகளைப் பகிர்ந்திருந்த படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்