நெட்பிளிக்ஸ் நிறுவனம் இனி தென்னிந்தியப் படங்களை வாங்குவதில்லை என்று அறிவித்திருப்பது தென்னிந்தியத் திரை உலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் தனது தென்னிந்திய மையமாக ஹைதராபாத் நகரைத் தேர்வு செய்து அங்கு புதிய அலுவலகத்தைத் திறந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் இனி அதிக விலை கொடுத்து படங்களை வாங்குவதை விட இணையத்தொடர்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. அதே வழியை மற்ற ஓடிடி நிறுவனங்களும் பின்பற்றினால், தென்னிந்திய திரையுலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது தென்னிந்திய திரையுலகம்.

