தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டுப் பாடி வட்டி கட்டினார் எஸ்பி பாலா: மனோ

1 mins read
fd8426ff-5318-4c03-9548-9df69955ee97
பாடகர் எஸ்பி பாலாவுடன் மனோ. - படம்: ஊடகம்

“திரைப்படத்தில் ஒரு பாடல் பாடினால், சில ஆயிரங்கள் சம்பளமாகக் கிடைக்கும். அதை வைத்து படம் தயாரிக்க முடியாது. எனக்கும் அந்த மனசு வரவில்லை,” என்று கூறியுள்ளார் பின்னணிப் பாடகர் மனோ.

இவரது மகன் துருவ், ‘வட்டக்கானல்’ என்ற படத்தில் நாயகனாக நடிப்பது குறித்து அளித்த பேட்டியில், தனக்கு முன்பு திரைப்படம் தயாரித்து, பாடகர் எஸ்பி பாலா உள்ளிட்ட பலர் சிரமப்படுவதைக் கண்டு தாம் கடந்த காலங்களில் வருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அண்ணன் எஸ்பி பாலா படம் தயாரித்து ஏற்பட்ட கடனுக்காக பாட்டுப் பாடி கிடைத்த பணத்தைக் கொண்டு வட்டி கட்டினார். எனவேதான் பாடுவதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கிறேன்.

“வெளிநாட்டு நண்பர்கள் படம் தயாரிக்கும்படி கூறியபோது உடன்படவில்லை. காரணம், அப்படிச் செய்தால் நட்பு முறிந்துபோகும். ஒரே சமயத்தில் பல கோடிகள் காணாமல் போய்விடும்.

“என் மீதான அன்பு காரணமாக, பாடகர்கள் சங்கர் மகாதேவன், கார்த்திக் ஆகியோர் என் மகன் நடிக்கும் படத்தில் பாடியுள்ளனர். அவர்களுக்கு நன்றி,” என்று மனோ கூறியுள்ளார்.

எஸ்பி பாலாவின் மகன் எஸ்பிபி சரண், சொந்தமாகத் தயாரித்த படங்கள் வசூலில் சாதிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட கடனை, உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகள் நடத்தி, கிடைத்த வருவாயைக் கொண்டு அடைத்தார் எஸ்பி பாலா என்று முன்பு தகவல் வெளியானது.

குறிப்புச் சொற்கள்