கேரளாவில் எஸ்.பி.பி உருவச்சிலை, நினைவுப்பூங்கா திறப்பு

கேரளாவில் எஸ்.பி.பி உருவச்சிலை, நினைவுப்பூங்கா திறப்பு

1 mins read
e80ac6cb-7b63-435b-9f08-b05370639603
இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியில் எஸ்.பி.பி மகன் சரண், அவரது குடும்பத்தினர், பின்னணிப் பாடகர்கள் கலந்துகொண்டனர். - படம்: தினமலர்

காலஞ்சென்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திரு உருவச் சிலை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் ஒரு நினைவுப்பூங்காவையும் அங்கு அமைத்துள்ளனர். சமம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி (மரகதமணி) கலந்துகொண்டு, எஸ்.பி.பாலாவின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார்.

பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு எஸ்.பி.பியின் நினைவுப்பூங்காவைத் திறந்து வைத்தனர்.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியில் எஸ்.பி.பி மகன் சரண், அவரது குடும்பத்தினர், பின்னணிப் பாடகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளைப் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாசும் இணைந்து மேற்கொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட் தொற்றுப் பாதிப்பு காரணமாக, எஸ்.பி.பாலா காலமானார்.

இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கடும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியது.

குறிப்புச் சொற்கள்