‘அமரன்’ படத்தின் பெரும் வெற்றியை அடுத்து, உற்சாகத்தின் உச்சத்தில் நிற்கிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து அவரது ஆன்மீக நாட்டம் அதிகரித்துள்ளது.
அண்மையில் மதுரையிலுள்ள முக்கியமான கோவில்களுக்கு நேரில் சென்று வழிபாடு செய்துள்ளார். கள்ளழகர், மீனாட்சி கோவில்களில் நீண்ட நேரம் இருந்து சிறப்புப் பூசை செய்தாராம்.
மேலும், உரிய காணிக்கைகள் கொடுத்து பயபக்தியுடன் பிரார்த்தனை செய்தது தொடர்பான தகவல்கள் அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள்.