தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கையில் ‘மதராஸி’ படப்பிடிப்பு

1 mins read
a9f54969-6cbf-483d-a5be-b28a92542fde
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘மதராஸி’ படத்தின் இறுதிக்காட்சிகளை இலங்கையில் படமாக்கவிருந்தனர்.

ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு 80 விழுக்காடு முடிந்துவிட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடிக்கத் தொடங்கியதால், ‘மதராஸி’ படம் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் முருகதாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கிறாராம் சிவா. இலங்கையில் இரு வாரங்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்த பிறகே ‘மதராஸி’ படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்