திருமணம் செய்துகொள்வது குறித்தும் இன்னும் திட்டமிடவில்லை என்றும் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறுகிறார் காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
இந்தித் திரையுலக இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் அண்மையில் பங்கேற்றார்.
அப்போது திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆசையை அவர் வெளிப்படுத்தினார்.
“திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையைக் கழிக்க விரும்புகிறேன். இதுதான் எனது எதிர்காலத் திட்டம்,” என்றார் ஜான்வி.
அண்மையில், ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார் ஜான்வி. அடுத்து தமிழில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.