ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தமிழில் நடிக்க இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இதுவரை அவர் தமிழில் நடித்தபாடில்லை.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரை தமிழில் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படத்தில் குஷிதான் கதாநாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் யார் கதாநாயகன் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், துருவ் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாம். மேலும், அதர்வா, அசோக் செல்வன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.